சேதுபாவாசத்திரம் பகுதியில் நோய் தாக்குதலுக்காளான உளுந்து

சேதுபாவாசத்திரம் வேளாண் அதிகாரி சாந்தி, உளுந்து பயிரில் தண்டு ஈ-க்கு விதைத்த 7-ம் நாளில் மானோகுரோட்டோபாஸ் மருந்தையும், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ-க்கு மீத்தைல் டெமட்டான், டைமீத்தோயேட் அல்லது பாஸ்போமிடான் மருந்தையும் (லிட்டருக்கு 2 மி. லி.) தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மஞ்சள் தேமல் தாக்கினால் பயிரைப் பிடுங்கி அழிக்கவும், வாடல், வேர் அழுகல் நோய்க்குப் பாவிஸ்டின் கரைசலையும், சாம்பல் நோய்க்கு நனையும் கந்தகத்தூளையும் (லிட்டருக்கு 10 கிராம்) பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி