தஞ்சாவூர்: 4 வீடுகளில் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூர் கரந்தையில் 4 வீடுகளில் புகுந்து திருடிய இளைஞரை காவல் துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். தஞ்சாவூர் கரந்தை பகுதியில் 4 வீடுகளில் நள்ளிரவு வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு, பீரோவில் உள்ள நகைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இது தொடர்பாக, தஞ்சாவூர் நகர கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உத்தரவின்படி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். சோமசுந்தரம் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், தஞ்சாவூர் வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோயில் தெரு ராஜாகோரி பகுதியைச் சேர்ந்த எஸ். சக்திவேல் (18) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை காவல் துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி