தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்கு இடையே பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தஞ்சை நகரம், வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும், இந்தத் திடீர் மழையால் மருங்குளம், குருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அறுவடைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்பட்டு வயல்களில் காயவைக்கப்பட்டிருந்த கடலைச் செடிகள் மழையில் நனைந்ததால், அவற்றை எந்திரம் மூலம் பிரித்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.