தஞ்சை: மூதாட்டி தாலி சங்கிலி பறிப்பு

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் ஆதிராசன். இவரது மனைவி தமிழரசி (வயது 73), வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் ஓட்டைப் பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்த மர்ம நபர் மூதாட்டி தமிழரசியின் கழுத்தில் இருந்த சுமார் 8.5 பவுன் எடையுள்ள தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு கொல்லைப்புற வழியாக தப்பி ஓடினார். 

இது நடந்த சுமார் அரை மணி நேரத்தில் அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வை. முத்துராமலிங்கம் என்பவர் வீட்டின் பின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மர்மநபர், அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மகள் சுமதி (வயது 31) என்பவரின் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி