பேராவூரணி மருத்துவர் எழுதிய நூலுக்கு தமிழக அரசின் விருது

பேராவூரணியைச் சேர்ந்த மருத்துவர் துரை. நீலகண்டன் எழுதிய ‘தூங்காத இரவுகள்’ என்ற நூலுக்கு, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது வழங்கப்பட்டுள்ளது.
​வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மருந்தியல், உடலியல், நலவியல் பிரிவின் கீழ் இந்த நூல் தேர்வு செய்யப்பட்டது.
​நூலாசிரியர் துரை. நீலகண்டனுக்கு அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ரூ. 50, 000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். நூலை வெளியிட்ட செங்கனி பதிப்பகத்திற்கு ரூ. 25, 000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி