தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் வேப்ப மரங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு தரமான வேப்பங்கன்றுகள் வழங்கப்பட்டது. மதுக்கூர் வட்டாரத்திற்கு 3 ஆயிரத்து 750 வேப்பங்கன்றுகள் 100சத மானியத்தில் வழங்க தஞ்சை வேளாண் இணை இயக்குனர் சுஜாதா வழிகாட்டுதலில் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு, சுரேஷ், முருகேஷ், ராமு ஆகியோர் வேப்பங்குளம், வாட்டாகுடி உக்கடை, மன்னங்காடு, உலையகுன்னம் ஆகிய ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வினியோகம் செய்தனர். பின்னர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, அட்மா திட்ட அலுவலர்கள் ஐயாமணி ஆகியோர் வேப்பங்குளம் கிராமத்தில் விவசாயிகள் நடவு செய்த வேப்பங்கன்றுக்களை ஆய்வு செய்தனர்.