சேதுபாவாசத்திரம்: பங்கு தொகை கேட்டு ஆசிரியர்கள் தவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், உறுப்பினர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக லாப பங்கீட்டுத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. 145 உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கம் லாபகரமாக இயங்கி வந்தாலும், 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கான லாபப் பங்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் முதல் மாநில பதிவாளர் வரை முறையிட்டும் பலனில்லை என உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி