தஞ்சாவூர்: சாரங்கபாணி தேரோட்டம்- வீடியோ

108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பிரமோற்சவம் விழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்வான தை திருநாள் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, திருதேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா சாரங்கா என முழக்கமிட்டு பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தமிழகத்திலேயே தமிழ் பொங்கல் நாளில் திருதேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி