திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தடை செய்யப்பட்ட பொருள் விற்பனை

தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பாலித்தீன் பைகள் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, செருவாவிடுதி, ஒட்டங்காடு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் அச்சமின்றி தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி