திருச்சிற்றம்பலம்: பால் வியாபாரியிடம் ரூ. 91350 பறிமுதல்

திருச்சிற்றம்பலம் அருகே உதயசூரியபுரம்-எ குறிச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த உப்புவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி பழனியப்பன் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 91,350-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி