புதுப்பிக்கப்பட்ட மனோரா நினைவுச் சின்னம், எம்எல்ஏ பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மனோரா நினைவுச் சின்னத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். ரூ. 2.75 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1814 ஆம் ஆண்டில் வாட்டா்லூ போரில் ஆங்கிலேயா்களின் வெற்றியைப் பாராட்டும் விதமாக இரண்டாம் சரபோஜி மன்னரால் இந்த நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது.

தொடர்புடைய செய்தி