வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் சுரேஷ், வட்டப் பொருளாளர் செல்வகணபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 9 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும்.