பேராவூரணி வாலிபர் தேனியில் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பவர் தேனி அருகே கம்பம் வரதராஜபுரம் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். அங்கு வேலை பார்த்த பொம்முத்தாய் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவரது வீட்டிலேயே குடியிருந்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் சதீஷ் உடலை மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி