இச்சாலையில், பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் ஆவணம் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை, புதுக்கோட்டை, சிதம்பரம், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகப் போக்குவரத்து உள்ள இந்த சாலையினை அகலப்படுத்துவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலை மேம்பாட்டுப் பணியினை, தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப் பொறியாளர் ரேணுகோபால், பேராவூரணி உதவி கோட்டப்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையைச் சேர்ந்த உதவிப்பொறியாளர் விமல்குமார், பேராவூரணி உதவிப்பொறியாளர் திருச்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.