பேராவூரணி: பாலப்பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ரூ. 700 கோடியில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனொரு பகுதியாக, பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி, ஏனாதிகரம்பையில் கல்லணைக் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப்பணியை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் வெள்ளிக்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அவரிடம் பாலப்பணி குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர்கள் காதர் ஒலி, சாக்ரடீஸ் ஆகியோர் வரைபடங்களை காட்டி விளக்கிக் கூறினர். ஆய்வின்போது, திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், கே. கே. டி. சுப்பிரமணியன், மா. பழனிவேல், சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி