பேராவூரணி: அரசுக்கல்லூரி மாணவர் சேர்க்கை.. முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 580 இளநிலை இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது. முதல்வர் சி. இராணி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்கும், ஜூன் 8 முதல் 18 ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தரவரிசைப்படி கலந்தாய்வு நடைபெறும். தரவரிசைப் பட்டியல் tngasa.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி