பேராவூரணி: திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்ட ஊர்வலம் மற்றும் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் தலைமையில், எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சேது சாலை வழியாக திமுகவினர் ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும், மேடையில் இருந்த கலைஞரின் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி