இதனால் இரவு நேரத்தில் அலுவலகப் பணி, கடை வேலை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பேராவூரணி வந்துவிட்டு முதன்மைச் சாலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செங்கமங்கலம் கிராமத்திற்குள் இறங்கிச் செல்ல பெண்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் ஏற்பாட்டில், மீண்டும் செங்கமங்கலம் வழியாக நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதனை வியாழக்கிழமை மாலை சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் சுப. சேகர், திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், அரசுப் போக்குவரத்துக் கழக பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம், அரவிந்த், சுரேஷ், பயணிகள், செங்கமங்கலம் கிராமத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.