பேராவூரணி: கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

பேராவூரணி சீவன்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் இருந்த மாமரத்தில் கதண்டு கூடு கட்டியிருந்தது. நேற்று காலை வீசிய காற்றில் கூட்டில் இருந்து கதண்டுகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களை கடித்தன. இதில் தாமோதரன் (50), ராமதாஸ் (65), நீலகண்டன் (65), கணேசன் (60), மஞ்சுளா (55), ஆனந்தன் (60), பாலகிருஷ்ணன் (70), கலைச்செல்வி (70), செல்வி (50), ரமேஷ் (55), மணிகண்டன் (35) உட்பட 12 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி