தஞ்சாவூரில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், எதிர்வரும் 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கில் நடைபெறுவுள்ளது. இக்கூட்டத்தில், திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்துகொள்கிறார். 

அச்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளையும், ஆலோசனைகளையும், நேரில் தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விபரங்களைப் பெறலாம். 

இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வுபெற்ற நாள், கோரிக்கை விபரம், செல்லிடப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு 23.06.2025 திங்கள்கிழமைக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தவறாது இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி