பட்டுக்கோட்டையில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டும், போதிய அடிப்படை மற்றும் பாதை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 15 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் 7.4 கி.மீ புறவழிச்சாலை திட்டத்தின் மீதிப் பணிகளை முழுமையாக முடித்து, சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளைச் சரிசெய்த பிறகே புதிய பேருந்து நிலையத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்; அதுவரை பழைய பேருந்து நிலையமே இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நகர வர்த்தக சங்க அவசரக்கூட்டத்தில் தீர்மானம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.