தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூரில் உள்ள அரசு மதுபான கடை (எண் 8082) காரணமாக, அருகில் உள்ள ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக ஆண்டிக்காடு கிராம மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அந்த மதுபான கடையை மூட முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.