தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தளிக்கோட்டை ஊராட்சியில், புதுக்குளம் செல்லும் மயானச் சாலையை புதிய தார்ச்சாலையாக அமைக்கும் பணி தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.