பட்டுக்கோட்டை: குடும்ப தகராறில் கூலித்தொழிலாளி மாயம்

பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (55) குடிப்பழக்கம் காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பவில்லை. குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் செல்வதாக மனைவி கூறியதால் மனமுடைந்த அவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவி மனோன்மணி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி