பழைமை வாய்ந்த கோயிலுக்கு பாலாலயம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில், 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததை புனரமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பேராவூரணி எம். எல். ஏ நா. அசோக்குமார் மேற்கொண்ட முயற்சியால் இந்த நிதி ஒதுக்கப்பட்டது. உபயதாரர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை காலை எம். எல். ஏ நா. அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி