பேராவூரணியில் உள்ள தனியார் கயிறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லூகோ முனி (33) என்ற தொழிலாளி, ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். உடல் சிதைந்திருந்ததால், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பேராவூரணியிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.