சேதுபாவாசத்திரம் அருகே ரூ. 4. 25 கோடியில் புதிய பாலம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், இரண்டாம்புளிக்காடு ஊராட்சி வேலாகுளம் சாலையில், பாப்பாங்கண்ணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 4 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மாநில சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி புதன்கிழமை காலை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கங்காதரபுரம், கறம்பக்காடு, செருபாலக்காடு ஊராட்சிகளை இணைக்கும் இந்தப் பாலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி