பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 இன் கீழ் சுவாமிமலை பேரூராட்சி 4 ஆம் வார்டு கலைஞர் காலனியில் ரூ. 15. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்வில் சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவேல், திமுக கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. முத்துச்செல்வன், பேரூராட்சி உறுப்பினர் கௌசல்யா காமராஜ், பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் பா. விஜயகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சபானா புர்க்கான், காங்கிரஸ் நகர தலைவர் ராமலிங்கம், விசிக நகர செயலாளர் மணி, மமக மாவட்ட பெறுப்புக்குழு உறுப்பினர்கள் புர்கான் அலி, அசரப் அலி, பேரூர் தலைவர் சாஜகான், செயலாளர் அசாருதீன், சமூக ஆர்வலர் முஸ்தபா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.