தனது துயரத்தை மாணவிசமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், தகவல் அறிந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி வெள்ளிக்கிழமை சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியும், நிதியுதவியும் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, விரைவில் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார். மேலும், மாணவி கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான புதிய சைக்கிளையும் உடனடியாக வழங்கினார். உதவிகளைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலிக்கு மாணவி நித்தியஸ்ரீ, அவரது தம்பி ஹரிஹரசுதன் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
பாபநாசம்
தஞ்சை அருகே வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்