சாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி, பள்ளிவாசல் தெரு சாலைகளை சீரமைத்து, தேங்கி கிடக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பேண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெரியண்ணன், சிபிஎம் கிளைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிஐடியு முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் மற்றும் பிடிஓ அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி