கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம் அமைக்கப்படும்: பாஜக

தஞ்சை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேராவூரணி பகுதியில் காலகம், கொற்றைங்காடு தென்னங்குடி, சிவன்குறிச்சி, மாவடுகுறிச்சி, செங்கமங்கலம், ஏனாதிகரம்பை, ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டக் கூடியவர் பிரதமர் மோடி. அமெரிக்காவை விட சக்தி வாய்ந்த நாடாக இந்தியாவை உருவாக்கி காட்டுவார் எனவே பிரதமர் மோடி மீண்டும் 3 வது முறையாக ஆட்சி அமைக்க. வாய்ப்பு கொடுங்கள். உலக பொருளாதாரத்தில் 5ம் இடத்துக்கு இந்தியாவை உயர்த்தி இருக்கிறார். மோடி மீண்டும்
பிரதமரானால் இந்தியாவை பொருளாதாரத்தில் 3 வது இடத்துக்கு கொண்டு வருவார். தென்னை மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். தென்னை நார் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு தஞ்சை மற்றும் பேராவூரணியில் கயிறு குழும பொது வசதி மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னை, காரைக் குடி, ராமேஸ்வரம், கம்பன் விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விரைவு ரயில்களும் அதிராம் பட்டினம், பேராவூரணி ரயில் நிலையத் தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும். அதிராம்பட்டினத்தில் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி