இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விற்பனை நிலைய மேலாளர் சக்தி தேவி இதனைத் தொடங்கி வைத்தார். களிமண் மற்றும் பித்தளை விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், விளக்குகளுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.