தஞ்சை: தொழிலாளர் நல நிதியை ஆன்லைனில் செலுத்தலாம் - உதவி ஆணையர்

தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: - தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற் சாலைகள், மோட்டார் போக்குவரத்து, மலைத் தோட்ட, உணவு நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒவ்வொராண்டும் தொழிலாளர் நல நிதி தொழிலாளர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

அதன்படி தொழிலாளியின் பங்காக ரூ. 20-ம், நிறுவனத்தின் பங்காக ரூ. 40-ம் சேர்த்து மொத்தம் ரூ. 60 செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியினை செலுத்துவதற்கு வசதியாக web-portal lwmis. lwb. tn. gov. in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை இணைய வழியாக பதிவு செய்து தொழிலாளர் நல செலுத்தி நிதியை செலுத்தி ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதனை செலுத்தும் போது 2024-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநிதி, கொடுபடாத்தொகை போன்றவற்றை இணையவழியாக செலுத்தலாம். வாரியத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும் web-portal-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை தொழிலாளர் நலநிதி செலுத்தாதவர்கள் நிறுவனம் தொடங்கிய ஆண்டில் இருந்து செலுத்தவேண்டும். நிலுவைத்தொகை செலுத்துவதற்கான வசதியும் web-portal-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி