தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் மடத்துவாசல் முருகன் கோவிலில் வசந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு இரவும் சுப்பிரமணியர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். இன்று வியாழக்கிழமை, சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் வீதி உலா வந்தபோது, பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.