அருள்மிகு லட்சுமி நரசிம்மர், அருள்மிகு வாராகி அம்மன் திருக்கோவில்கள் கர்ப்ப கிரகங்கள், ஏகதள விமானங்கள், அர்த்த மகா மண்டபங்கள் அமைப்புகளோடு பஞ்சவர்ண பொலிவுடன் நிர்மானிக்கப்பெற்று அநாவர்த்தன பிரதிஷ்டை, வெள்ளிக்கிழமை காலை 10. 15 மணிக்கு துலாம் லக்னத்தில் நடைபெற்றது.
திருக்குடமுழுக்கு விழாவை ஸ்ரீலஸ்ரீ ஜோதிமலை இறைப்பணி மன்ற கூட்டத் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி மங்கல இசை, திரு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, நவக்கிரம ஓமங்கள், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, மூலாலயப் பிரவேசம், சங்கல்பம், திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10. 15 மணிக்கு விமான கலசங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுதல் மகா கும்பாபிஷேகம்) மகாதீபம் காட்டுதல் நடைபெற்றது.
இதில் வாதலைக்காடு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.