முன்னதாக ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து மக்களுக்கு கேழ்வரகு கஞ்சி, கொழுக்கட்டை, சுண்டல் வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மாதாமாதம் தவறாமல் எடை பார்த்த குழந்தைகளில் சிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காலகம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்) ராஜேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் லதா, கண்காணிப்பாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் செல்வநிதி, பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.