இவ்விழாவிற்கு, பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் எஸ். ராணி, உதவி வேளாண் அலுவலர் க. கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற வேளாண் உதவி இயக்குனர் கே. ஆர். கோவிந்தராஜன் கலந்து கொண்டு, வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும் வேளாண் பயிற்சியில் செய்யவிருக்கும் செயல் விளக்கம் பற்றியும் அக்குழு மாணவிகள் எடுத்துரைத்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியைகள் ச. செந்தாரகை, ச. லேகா பிரியங்கா நடைமுறை வேளாண் செய்முறைகளை நேரடியாக விவசாயிகளுக்கு செய்து காட்டுமாறு அறிவுறுத்தினர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் வே. திருமால் கண்ணன், த. வினோதா, வேளாண் உதவி அலுவலர்கள், புஷ்கரம் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி