பட்டுக்கோட்டை: அரசுப் பள்ளியிலேயே படிப்பேன் - மாணவி பேட்டி

பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் - சுதந்திரமணி தம்பதியரின் மகள் வைஷ்ணவி. ஆலத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். தனியார் பள்ளிகள் சலுகைகளுடன் அழைப்பு விடுத்தபோதிலும், தான் படித்த அரசுப் பள்ளியிலேயே தொடர்ந்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிப்பேன் என்று வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி