பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட செருவாவிடுதி பகுதியில் தஞ்சாவூர்-சாயல்குடி மாநில சாலையை இருவழித்தடத்திலிருந்து பல வழித்தடமாக அகலப்படுத்தி தார் சாலை அமைக்கும் பணியை உதவி கோட்டப்பொறியாளர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் திருச்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.