தஞ்சாவூர்: நிலக்கடலை விதைக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், மானாவாரி பகுதியிலான தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் நெல் சாகுபடிக்குப் பிறகு நிலக்கடலை விதைக்கும் பணி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பங்குனி மாதத்தில் அறுவடைக்கு வரும் சம்பா நெல் சாகுபடியில் போதிய மகசூல் கிடைக்காத பட்சத்தில் நிலக்கடலையில் அதிகமாக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், குறைவான தண்ணீரை செலவாகும் என்பதாலும் நிலக்கடலையை விவசாயிகள் விதைப்பது வழக்கம். 

தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 3,800 ஏக்கரில் நிலக்கடலை விதைக்கப்பட்டுள்ளது. உழவுமாடு பயன்பாடு குறைந்து விட்டதால் தற்போது விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி நிலக்கடலை விதையை விதைத்து வருகின்றனர். விவசாயிகள் குறுவையில் தரமான விதைக்கடலையை, விலை குறைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி