தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் நான்கு மாதங்களாக நிலவிய கடும் வெயிலும், மழை இன்மையும் விவசாயிகளை கவலையடையச் செய்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில், நேற்றுமுன்தினம் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையைப் பயன்படுத்தி, மார்கழி மற்றும் தை மாதங்களில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ள நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.