தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் முறைவைத்து தண்ணீர் வழங்கப்படுவதால், சுமார் 40% விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்து நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நடப்பு மார்கழி பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் தற்போது 45 முதல் 50 நாட்கள் வளர்ந்துள்ளன. அதிக மகசூல் பெறுவதற்காக விவசாயிகள் நுண்ணூட்டக் கரைசல் மற்றும் பயிர் ஊக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.