தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ₹19.02 கோடியில் கட்டப்பட்ட 168 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், திறந்து வைக்கப்பட்டு பல மாதங்களாகியும் பயனாளிகள் இன்றி வீணாகி வருகின்றன. போக்குவரத்து வசதியற்ற ஏரிப் பகுதியில் அமைந்திருப்பதாலும், ஒரு வீட்டிற்கு ₹2.82 லட்சம் கட்டக் கோருவதாலும் ஏழை மக்கள் குடியேற மறுப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புதிய தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.