பேராவூரணி அருகே காலகம் கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியாகசுந்தரம் என்பவரின் மனைவி துளசிகா அணிந்திருந்த ஆறு பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் அறுத்துக் கொண்டு தப்பி ஓடினர். இதேபோல் சுகுணா, வழக்குரைஞர் விவேகானந்தன் வீடுகளிலும் திருட்டு நடந்துள்ளது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று, 3 கி. மீ தொலைவில் மதுபானக் கடை அருகே விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.