மலேசியா தொழிலதிபர் மறைவுக்கு முன்னாள் தொழிலாளர்கள் அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் வசிக்கும் மலேசிய தொழில் அதிபர் யாப் (70) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இந்திய ஊழியர்களிடம் அன்பாகப் பழகி வந்த யாப்பின் மறைவை அறிந்த குருவிக்கரம்பை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பேராவூரணி பகுதியில் இருந்து 70க்கும் மேற்பட்டோர் பின்தாங் குரூப் ஆப் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி