கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல்வளம் தற்போது இல்லை. அப்போது இருந்த படகுகள் எண்ணிக்கையும் தற்போது இல்லை. தடைகாலம் முடிந்து படகுகளை எடுத்தாலும் ஒரு வார காலம் மட்டுமே மீன் அதிகளவில் கிடைக்கும். பிறகு தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது டீசல் விலை உயர்வால் மீனவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் அவர்களின் நிலை அறிந்து டீசலுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால் அழிவின் விளிம்பில் மீனவர்கள் நிற்கிறார்கள். கோடைகாலத்தில் தடைகாலம் வருவதால் படகுகள் காய்ந்து அதிக அளவில் சேதமடைகிறது. படகுகளை பராமரித்து மீண்டும் தொழிலுக்கு எடுக்கும் போது, சாதாரணமாக 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்து படகுகளை தொழிலுக்கு அனுப்ப வேண்டி உள்ளது.
எனவே படகுகளை பராமரிப்பதற்கு வட்டியில்லாத கடன்களை வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க வேண்டும். மீனவர்கள் நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக மீனவர்கள் பிடித்து வரும் கடல் உணவுப் பொருள்களை சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்குகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.