தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் கடலுக்கு செல்லாத மீனவர்கள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கடந்த சனிக்கிழமை முதல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள 146 விசைப்படகுகளும், 4000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி