கடைமடை பகுதியில் ஏரி குளங்களை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

கல்லணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயம் சற்றே பாதிப்படைந்துள்ளனர். இருந்த போதிலும் கடைமடைக்கு தண்ணீர் வருவதில் சிரமம் இருந்து கொண்டே வருகிறது. தண்ணீர் இல்லாததால் கடைமடையில் புல் பூண்டுகள் கூட கருகி விட்டன. இந்த ஆண்டு குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் 20 தினங்கள் தாமதமாகவே திறக்கப்பட்டது. காலம் கடந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடியை முழுமையாக செய்ய முடியுமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர். கல்லணைக் கால்வாய் நீர் மூலம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி தாலுகா உள்பட இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஆண்டு கடும் வறட்சியால் ஏரி குளங்கள் வறண்டு கிடக்கின்றன. குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உள்ளது. எனவே முன்னுரிமை அடிப்படையில் கல்லணை கால்வாய் கடைமடை பாசன பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட்டு ஏரி, குளங்களை முதலில் நிரப்ப வேண்டும். மேலும் ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி