தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாகவும், தனியார் கடைகளில் பயிர் ஊக்கிகளை வாங்க கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதாகவும், பின்னவாசல் முத்துமாரியம்மன் கோவில் குளத்திற்கு படிக்கட்டு அமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், குடிமனைப் பட்டா வழங்கக் கோரியும் டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.