கூட்டத்திற்கு, வி. தொ. ச ஒன்றியச் செயலாளர் மு. சித்திரவேலு தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பா. பாலசுந்தரம். வி. தொ. ச மாவட்டச் செயலாளர் சி. பக்கிரிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஐ ஒன்றியச் செயலாளர் சி. வீரமணி, வி. தொ. ச மாநிலக்குழு வி. ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூத்த தோழர் பாரதி வை. நடராஜன், சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, வி. தொ. ச ஒன்றியத் தலைவர் பி. ஏ. கருப்பையா, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த. ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பி. சீனிவாசராவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.